2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் “ஏ” அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட, நான்கு நாள், உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில், கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், ஏழு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

முதலாவதாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், விஷால் சிங் 96, அணித்தலைவர் ஷமராஹ் ப்ரூக்ஸ் 65, கேமார் றோச் ஆட்டமிழக்காமல் 45, கிரண் பவல் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அசேல குணரட்ன மூன்று, சரித் அசலங்க, அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சகல விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் திமுத் கருணாரட்ண 131, குசல் பெரேரா 87, நிரோஷன் டிக்வெல 59, அசேல குணரட்ன 38 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஹீம் கோர்ண்வெல் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 175 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், விஷால் சிங் 46, குடகேஷ் மொட்டி 34, ஷமராஹ் ப்ரூக்ஸ் 28, ஜோன் கம்பெல் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்ஷன் சந்தகான் நான்கு, சரித் அசலங்க, அசேல குணரட்ன, அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, 66 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை, மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், டிமுத் கருணாரட்ன ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கெயோன் ஜோஸப் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .