Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பரம வைரிக் கழகங்களான மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டை மன்செஸ்டர் சிற்றி வீழ்த்தியது.
தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், 12ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றதுடன், முதற்பாதி முடிவு வரை குறித்த கோல் மட்டுமே பெறப்பட்ட நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர், இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்தில், சக முன்கள வீரர் றியாட் மஹ்ரேஸுடன் பந்தை பரிமாறிக் கொண்டு வந்த சேர்ஜியோ அகுரோ பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை சிற்றி இரட்டிப்பாக்கிக் கொண்டது.
இதையடுத்து, காயமடைந்த போல் பொக்பா இல்லாமல் விளையாடியிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட், அடுத்த 10ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய றொமேலு லுக்காக்கு, சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சனால் வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை அன்டோனி மார்ஷியல் கோலாக்கியதன் மூலம் முன்னிலையை ஒரு கோலாக குறைத்துக் கொண்டது.
எவ்வாறெனினும், மாற்று வீரராகக் களமிறங்கிய சிற்றியின் இல்கி குன்டோகன், 44 தொடர்ச்சியான பந்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து போட்டியின் இறுதி நிமிடங்களில் பெற்ற கோலோடு 3-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் சிற்றி வென்றது.
பிறீமியர் லீக்கில் நேற்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு
லிவர்பூலின் மைதானத்தில்,
லிவர்பூல் 2 – 1 புல்ஹாம்
முதற்பாதி முடிவில் 1-0
மொஹமட் சாலா 41
ஸ்கொட்ரான் ஷகி 53
செல்சியின் மைதானத்தில்,
செல்சி 0 – 0 எவெர்ற்றன்
ஆர்சனலின் மைதானத்தில்,
ஆர்சனல் 1- 1வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ்
முதற்பாதி முடிவில் 0-1
ஹென்றிக் மிகித்தரயான் 86 இவான் கவலெய்ரோ 13
17 minute ago
1 hours ago
03 Oct 2025
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
03 Oct 2025
03 Oct 2025