Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கு இத்தாலி தகுதிபெற்றுள்ளது.
தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற கிரேக்கத்துடனான குழு ஜே போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே யூரோ கிண்ணத் தொடருக்கு இத்தாலி தகுதிபெற்றுள்ளது. இத்தாலி சார்பாக, ஜோர்ஜினியோ, ஃபெடெரிக்கோ பெர்ணார்ட்டெக்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
குறித்த வெற்றியுடன் குழு ஜேயில் 21 புள்ளிகளுடன் அசைக்க முடியாத 11 புள்ளிகள் முன்னிலையை இத்தாலி பெற்றிருந்த நிலையிலேயே மூன்று போட்டிகள் இருக்கும் நிலையிலேயே யூரோ கிண்ணத் தொடருக்கு இத்தாலி தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை, தமது நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஸ்பெய்னுடனன குழு எஃப் யூரோ கிண்ண தகுதிகாண் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நோர்வே முடித்திருந்தது. ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாவுல் நிகூஸ் பெற்றதோடு, நோர்வே சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோஷுவா கிங் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது நாட்டில் நேற்றிரவு இடம்பெற்ற சுவிற்ஸர்லாந்துடனான குழு டி யூரோ கிண்ண தகுதிகாண் போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வென்றிருந்தது. டென்மார்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசுஃப் பெளல்சன் பெற்றிருந்தார்.
26 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
39 minute ago