Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்ட தொடரான லா லிகாவில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற (24), றியல் மட்ரிட், லாஸ் பல்மாஸ் அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியில், றியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மாற்று வீரரால் பிரதியிடப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, ரொனால்டோ, கோபமாக எதிர்வினையாற்றியது போலத் தென்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, தனக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குமிடையில் மோதல் என்பதை றியல் மட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஸினேடி ஸிடான் மறுத்துள்ளார்.
2-2 என்ற கோல் கணக்கில், சமநிலையில் முடிவடைந்த குறித்த போட்டியின் 72ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரதியீடு செய்யப்பட்டது பரவலாக அவதானிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவமானது ஏற்கெனவே மறக்கப்பட்டுவிட்டதாக ஸிடான் தெரிவித்தார்.
எல்லாம் வழமையாக இருப்பதாகவும், போட்டியினைத் தொடர்ந்து ரொனால்டோ மட்டும் கோபமாக இருக்கவில்லையென்றும், ஆனால் தற்போது அது முடிந்து விட்டதாகவும் , அடுத்த போட்டியைப் பற்றியே தாங்கள் சிந்திப்பதாக செய்தியாளர் மாநாடொன்றில் ஸிடான் கூறியுள்ளார்.
தாங்கள் இது பற்றிக் கதைத்ததாகவும், தான் முட்டாள் இல்லையென்றும் ரொனால்டோ புத்திசாலி என்று மேலும் தெரிவித்த ஸிடான், தாங்கள் அனைவரும் ஒரே நோக்கத்தையே கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
22 minute ago
31 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
4 hours ago