2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

றிச்சி பேனருக்கு நாணயத்தால் கௌரவம்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 24 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட்டின் குரல் என அழைக்கப்படும் முன்னாள் நேர்முக வர்ணனையாளரும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவருமான றிச்சி பேனரைக் கௌரவித்து, 50 சத நாணயக்குற்றி ஒன்றை, அவுஸ்திரேலியா வெளியிடவுள்ளது.

கடந்தாண்டு தனது 84ஆவது வயதில், றிச்சி பேனர் காலமாகியிருந்தார். இந்நிலையிலேயே, பேனரின் மனைவியின் அனுமதியோடு, இந்த நாணயக்குற்றி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள், 95,929 மாத்திரமே வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

உலகில் தோன்றிய தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக ஏற்றுக் கொள்ளப்படும் டொன் பிரட்மனுக்குப் பின்னர், நாணயக்குற்றி மூலம் கௌரவிக்கப்படும் இரண்டாவது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், றிச்சி பேனர் ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .