Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக் மேசைப்பந்தாட்ட ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பானைத் தோற்கடித்த சீனா, ஒலிம்பிக் மேசைப்பந்தாட்ட வரலாற்றில் தமது ஆதிக்கத்தை தொடருகின்றது.
சீனாவின் மா லொங், ஜிகே ஸாங், ஸூ ஸின் ஆகியோர் ஜப்பானின் கோகி நிவா, ஜூன் மிஸூதானி, மஹரு யொஷிமுரா ஆகியோரை உள்ளடக்கிய அணியை 3-1 என்ற ரீதியில் வென்றே தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 3-1 என்ற ரீதியில் தென்கொரியாவை ஜேர்மனியை தோற்கடித்திருந்தது.
றியோ ஒலிம்பிக்கில், பெண் தனிநபர், பெண்கள் அணி, ஆண் தனிநபர், ஆண்கள் அணி என நான்கு வகையான மேசைப்பந்தாட்டப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்ற சீனா, 1988ஆம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் போட்டிகளில் மேசைப்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இடம்பெற்ற 32 போட்டிகளில் 28 தங்கப் பதக்கங்களை சீனா வென்றுள்ளது.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026