Shanmugan Murugavel / 2021 ஜனவரி 26 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, முகாமையாளர் பிராங்க் லம்பார்ட்டை 18 மாதங்கள் பொறுப்பிலிருந்த பின்னர் நீக்கியுள்ளது.
இந்நிலையில், லம்பார்ட்டை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் தோமஸ் துஷெல் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறீமியர் லீக்கின் கடந்த ஐந்து போட்டிகளில் ஒன்றிலேயே வென்ற செல்சி, பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் தற்போது ஒன்பதாமிடத்தில் காணப்படுகின்றது.
மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் லம்பார்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், செல்சியை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான காலத்தைக் கொண்டிருக்காமைக்காக வருத்தமடைவதாக நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் லம்பார்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த பருவகாலத்தில் 200 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு ஏழு வீரர்களை லம்பார்ட் கடந்த பருவகாலத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026