2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

லெவன்டேயிடம் தோற்ற றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 31 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், லெவன்டேக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.

றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ அஸென்ஸியோ பெற்றிருந்ததோடு, லெவன்டே சார்பாக ஜொஸே லூயிஸ் மொராலெஸ், றொஜர் மார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 40 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றபோதும், றியல் மட்ரிட்டை விட இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள அத்லெட்டிகோ மட்ரிட் 47 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செவில்லா காணப்படுவதுடன், றியல் மட்ரிட்டை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள பார்சிலோனா 37 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X