Shanmugan Murugavel / 2021 மார்ச் 07 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், லேஸியோவுக்குமிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.
ஜுவென்டஸ் சார்பாக, அல்வரோ மொராட்டா இரண்டு கோல்களையும், அட்ரியன் றபியொட் ஒரு கோலையும் பெற்றனர். லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோக்கின் கொரேரா பெற்றிருந்தார்.
அந்தவகையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில், 59 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலனுள்ளது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஜுவென்டஸும், 49 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லாண்டாவுமுள்ளது.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026