Editorial / 2018 நவம்பர் 13 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையின் மூன்று பிரிவுகளை மீறினாரென இலங்கையணியின் முன்னாள் வீரரான டில்ஹார லொக்குஹெட்டிகே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஐக்கிர அரபு அமீரக கிரிக்கெட் சபையின் சார்பில் சர்வதேச கிரிக்கெட் சபை லொக்குஹெட்டிகே மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தாண்டில் விளையாடப்பட்ட இ-10 கிரிக்கெட் லீக் தொடர்பாகவே குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லொக்குஹெட்டிகே தொழில்முறையாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உள்ளூர்ப் போட்டியொன்றை நிர்ணயம் செய்ய அல்லது முறையற்ற விதத்தில் அதன் முடிவிலோ, போக்கிலோ அல்லது வேறு எந்த விடயங்களிலோ தாக்கம் செலுத்த முயன்றமை, இதே விடயத்தை வீரரொருவரை செய்யுமாறு தூண்டியமை, மோசடிக்கெதிரான அதிகாரிக்கு எந்த அணுகலினதும் முழுமையான தகவல்களை வழங்காமை ஆகிய குற்றச்சாட்டுகளே லொக்குஹெட்டிகே மீது சுமத்தப்பட்டுள்ளது.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026