2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

லெய்ப்ஸிக்கை வென்றது பெயார்ண் மியூனிச்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று (21) இடம்பெற்ற போட்டியொன்றில், புண்டெலிஸ்கா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்த ஆர்.பி லெய்ப்ஸிக் அணியை பெயார்ண் மியூனிச் வென்றது.

பெயார்ண் மியூனிச், 3-0 என்ற கோல் கணக்கில் லெய்ப்ஸிக்கை வென்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், புண்டெலிஸ்கா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள ஆர்.பி லெய்ப்ஸிக்கை விட மூன்று புள்ளிகள் அதிகமாக 39 புள்ளிகளைப் பெற்று குளிர்கால இடைவெளிக்கு பெயார்ண் மியூனிச் செல்கிறது.

ரொபேர்ட் லெவன்டோஸ்கியின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியபோது, நெருங்கிய தூரத்திலிருந்து போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்ற தியாகோ அல்கான்டரா பெயார்ணுக்கு முன்னிலையை வழங்கியிருந்தார். பின்னர், அவர் வழங்கிய பந்தினை பெர்னாண்டோ அலோன்ஸோ போட்டியின் 25ஆவது நிமிடத்தில் கோலாக்க 2-0 என்ற முன்னிலையை பெயார்ண் பெற்றதுடன்,  முதற்பாதியின் முடிவில் டக்லஸ் கோஸ்டா வீழ்த்தப்பட கிடைத்த பெனால்டியை லெவன்டோஸ்கி கோலாக்க 3-0 என்ற உறுதியான முன்னிலையை பெற்று, இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .