Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 19 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற வில்லாறியலுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் சம்பியனாகியுள்ள பார்சிலோனா தோற்றது.
பார்சிலோனா சார்பாக லமீன் யமால், பெர்மின் லொபேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வில்லாறியல் சார்பாக அயோஸ் பெரேஸ், சன்டி கொமெசனா, தஜோன் புச்சனான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் செவிய்யாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. மட்ரிட் சார்பாக கிலியான் மப்பே, ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற றியல் பெட்டிஸுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
5 hours ago
15 Jun 2025
15 Jun 2025