Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 17 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் மற்றும் ட்ரெண்ட் போல்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிம் செளதியால் தலைமை தாங்கப்படும் குறித்த குழாமில் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷில் பேர்த் ஸ்குறோச்சர்ஸுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டமை காரணமாக கொலின் மன்றோ கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இச்சந்தர்ப்பத்தில், துடுப்பாட்டவீரர் டெவோன் கொன்வே முதற்தடவையாக நியூசிலாந்துக் குழாமொன்றில் இடம்பெற்றதுடன், கைல் ஜேமிஸன் முதற்தடவையாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளுக்கான குழாமில் மாத்திரமே செளதி, ஜேமிஸன், றொஸ் டெய்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், மூன்றாவது போட்டிக்கான குழாமில் டவ் பிறேஸ்வேல், ஸ்கொட் குக்லஜின், மார்க் சப்மனால் பிரதியிடப்படுகின்றனர்.
இதேவேளை, துடுப்பாட்டவீரர் கிளென் பிலிப்ஸும் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.
குழாம்: டிம் செளதி (அணித்தலைவர்), கைல் ஜேமிஸன், கிளென் பிலிப்ஸ், ஹமிஷ் பெனிட், டரைல் மிற்செல், டிம் செய்ஃபேர்ட் (விக்கெட் காப்பாளர்), டெவோன் கொன்வே, ஜிம்மி நீஷம், றொஸ் டெய்லர், லொக்கி பெர்கியூசன், மிற்செல் சான்ட்னெர், மார்டின் கப்தில், இஷ் சோதி.
டெஸ்ட் குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொம் லேதம், நீல் வக்னர், டொம் பிளன்டெல், ஹென்றி நிக்கொல்ஸ், பி.ஜெ. வட்லிங் (விக்கெட் காப்பாளர்), ட்ரெண்ட் போல்ட், அஜாஸ் பட்டேல், வில் யங்க், கொலின் டி கிரான்ட்ஹொம், டிம் செளதி, கைல் ஜேமிஸன், றொஸ் டெய்லர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago