Editorial / 2017 நவம்பர் 20 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ கால்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், இன்டர் மிலன் வென்றுள்ளதுடன், ஜுவென்டஸ் தோற்றுள்ளது.
இன்டர் மிலன், 2-0 என்ற கோல் கணக்கில் அட்லாண்டாவை வென்றது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அவ்வணியின் தலைவர் மெளரோ இகார்டி பெற்றிருந்தார்.
ஜுவென்டஸ், 2-3 என்ற கோல் கணக்கில், சம்ப்டோரியாவிடம் தோல்வியடைந்தது. சம்ப்டோரியா சார்பாக, டுவன் ஸபட்டா, லூகாஸ் டொரெய்ரா, ஜியமர்கோ பெராரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜுவென்டஸ் சார்பாக, கொன்ஸலோ ஹியூகைன், போலோ டிபாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் 35 புள்ளிகளுடன் முதலிடத்தில் நாப்போலியும் 33 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும் 31 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago