Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், பிறிஸ்பேணில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் அவுஸ்திரேலியாவுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜேம்ஸ் வின்ஸ் 83, டேவிட் மலன் 56, மார்க் ஸ்டோன்மன் 53, மொயின் அலி 38 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நேதன் லையன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 141, ஷோர்ன் மார்ஷ் 51, பற் கமின்ஸ் 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டுவேர்ட் ப்ரோட் 3, ஜேம்ஸ் அன்டர்சன், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஜோ றூட் 51, ஜொனி பெயார்ஸ்டோ 42, மொயின் அலி 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற அவுஸ்திரேலியா, இன்றைய ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், டேவிட் வோணர் 60, கமரோன் பன்குரோப்ட் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர்.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026