Shanmugan Murugavel / 2021 ஜூன் 12 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்புச் சம்பியனான ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை எதிர்கொண்ட மூன்றாம் நிலை வீரரான ஸ்பெய்னின் நடால், 6-3, 3-6, 6-7 (4-7), 2-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில், உலகின் ஆறாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை எதிர்கொண்ட ஐந்தாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
8 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Apr 2026