2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோக்கோவிச், பெடரர், ரட்வன்ஸ்கா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 30 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மூன்றாவது நாள் போட்டிகளில், முன்னணி வீர, வீராங்கனைகளுக்கு வெற்றி கிடைத்தது. விம்பிள்டனுக்காகத் தரப்படுத்தப்பட்டிருந்த எந்தவொரு வீர, வீராங்கனையும், அன்றைய தினம் தோல்வியடைந்திருக்கவில்லை.

ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில் உலகில் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டு, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

மற்றைய போட்டியில், உலகில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரொஜர் பெடரரை, பிரித்தானியாவைச் சேர்ந்த பகுதிநேர டென்னிஸ் பயிற்றுநரும் 772ஆம் நிலை வீரருமான ஐக்கிய இராச்சியத்தின் மார்க்கஸ் வில்லிஸை எதிர்கொண்டார்.

இதுவரை 7 விம்பிள்டன் பட்டங்களை வென்று, விம்பிள்டன் வரலாற்றில் அதிகம் மதிக்கப்படும், நேசிக்கப்படும் வீரராகக் காணப்படும் பெடரரை முந்தி, வில்லிஸூக்கு அதிக ஆதரவு காணப்பட்டது. போட்டியை 6-0, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்ட பெடரர், போட்டி முடிவில் வில்லிஸூக்கு கைதட்டல் காணப்பட, அதை அவர் பெற்றுமுடிக்கும் வரை ஓரமாக நின்று, அந்தப் பாராட்டை வில்லிஸ் முழுவதுமாகப் பெற வாய்ப்பளித்தார். போட்டி முடிந்து வெளியே செல்கையிலும், அங்கிருந்தோருக்குக் கையசைத்து வில்லிஸ் வெளியேற, பெடரர் அமைதியாகச் சென்று, தனது உயர்ந்த பண்பை வெளிப்படுத்தினார்.

ஏனைய போட்டிகளில் 9ஆம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிச் தியம், 20ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் பேர்ணாட் தொமிக் ஆகியோரும் வென்றனர்.

பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் 3ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா, உக்ரைனின் கட்டெரினா கொஸ்லோவாவை 6-2, 6-1 எனவும், 7ஆம் நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிக், பல்கேரியாவின் ஸ்வெட்டா பிரோன்கோவாவை 6-2, 6-3 என்ற கெட் கணக்கிலும் வென்றனர்.

16ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய இராச்சியத்தின் ஹன்ன கொன்டா, கனடாவின் ஈகெனி பௌச்சார்ட் ஆகியோருக்கும் 3ஆம் நாளில் வெற்றிகள் கிடைத்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .