Gopikrishna Kanagalingam / 2016 நவம்பர் 06 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் 4ஆம் நாள் முடிவில், தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்று, வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது.
539 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, நேற்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி, இன்றைய நாள் முழுதும் காணப்படுகின்ற நிலையில், வெற்றிக்காக 370 ஓட்டங்கள் தேவைப்படுவதோடு, வெற்றி - தோல்வியற்ற முடிவைப் பெறுவதனால், குறைந்தது 90 ஓவர்களுக்குத் துடுப்பெடுத்தாட வேண்டியுள்ளது.
துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 58, டேவிட் வோணர் 35, ஸ்டீவன் ஸ்மித் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கஜிஸ்கோ றபடா, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக தென்னாபிரிக்க அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 540 ஓட்டங்களைப் பெற்று, தமது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில் ஜே.பி டுமினி 141, டீன் எல்கார் 127, வேர்ணன் பிலாந்தர் 73, குயின்டன் டீ கொக் 64 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட், பீற்றர் சிடில், மிற்சல் மார்ஷ் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
6 minute ago
15 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
29 minute ago