2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஷுமாக்கரின் சாதனையை சமன் செய்த ஹமில்டன்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 15 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர்மியுலா வண்ணில் அதிக பட்டங்களைக் கைப்பற்றிய ஜேர்மனியின் மைக்கல் ஷுமாக்கரின் சாதனையை பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் சமப்படுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற துருக்கிய குறான் பிறீயில் வென்றதன் மூலம் ஏழாவது சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியே ஷுமாக்கரின் சாதனையை மெர்சிடீஸ் அணியின் ஓட்டுநரான ஹமில்டன் சமப்படுத்தியுள்ளார்.

இப்பந்தயத்தை ஆறாவது இடத்திலிருந்து ஆரம்பித்த ஹமில்டன், ஈரமான ஓடுபாதையில் மிகச்சிறப்பாக காரைச் செலுத்தி முதலிடத்தைப் பெற்று இன்னும் மூன்று பந்தயங்கள் இருக்கையிலேயே இவ்வாண்டு சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

இப்போட்டியை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த றேசிங் பொய்ன்ட் அணியின் மெக்ஸிக்க ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸ் இரண்டாமிடத்தையும், பந்தயத்தை 11ஆவது இடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அந்தவகையில், ஷுமாக்கரும், ஹமில்டனும் தலா ஏழு பட்டங்களை வென்று முதலாமிடத்திலுள்ள நிலையில், அடுத்த இடத்தில் ஐந்து பட்டங்களுடன் ஆர்ஜென்டீன ஓட்டுநரான ஜுவான் மனுவல் பக்னியோ காணப்படுகிறார். இதற்கடுத்து, இங்கிலாந்து ஓட்டுநரான அலைன் புறொஸ்ட்டும், வெட்டலும் நான்கு பட்டங்களுடன் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .