Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 21 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற உலகின் ஏழாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வுடனான போட்டியில் 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்றே சேர்பியாவின் ஜோக்கோவிச் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற உலகின் ஒன்பதாம்நிலை வீரரான டியகோ ஸ்வார்ட்ஸ்மானுடனான போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் நான்காம் நிலை வீரரான ரஷ்யாவில் டனில் மெட்வெடெவ் வென்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .