Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற மலேஷியன் கிரான்ட் பிறிக்ஸில், முன்னணியில் இருந்து, இயந்திரம் தீப்பிடித்தமை காரணமாக, மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், பந்தயத்திலிருந்து விலகிய நிலையில், தனக்கு, நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப்பை கிடைப்பதை தடுத்து, சதி செய்வது கடவுளா என கோபமடைந்த ஹமில்டன் சந்தேகிக்கின்றார்.
16 சுற்றுக்கள் இருக்கையில், இயந்திரம் தீப்பிடித்த நிலையில், சம்பியன்ஷிப் புள்ளிகளில், சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்கை முந்த எதிர்பார்த்திருந்த ஹமில்டனின் நம்பிக்கை தகர்ந்திருந்தது.
குறித்த பந்தயத்துக்கு முன்னர் றொஸ்பேர்க்கை விட எட்டுப் புள்ளிகள் குறைவாகவே ஹமில்டன் இருந்த நிலையில், தனது 50ஆவது வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியிருந்தார்.
முதலாவது வளைவில் ஏற்பட்ட மோதலால், பின்வரிசைக்குச் சென்ற றொஸ்பேர்க், நான்காவதாகவே வந்து கொண்டிருந்த நிலையில், சம்பியன்ஷிப் புள்ளிகளில் ஹமில்டன் முந்தப் போகின்றார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹமில்டன் விலகியதால், றொஸ்பேர்க்ககுக்கு மூன்றாமிடம் கிடைத்ததுடன், சம்பியன்ஷிப் புள்ளிகளில் 23 புள்ளிகள் முன்னிலையும் கிடைத்தது.
இந்நிலையில் கருத்து தெரிவித்த ஹமில்டன், கடவுள் சிறிது தலையீடு செய்கின்றார் எனவும், தான் இன்னும் போராடுவேன் என்றும், ஆனால் ஆண்டின் இறுதியில், தான் வெல்லுவதை கடவுள் விரும்பவில்லையென்றால், தான் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, தனது அணியையும் சாடிய ஹமில்டன், மெர்சிடிஸுக்கான தனது கேள்வி என்னவெனில், தாங்கள் பல இயந்திரங்களைக் கொண்டிருப்பதாகவும், தனது இயந்திரம் மட்டுமே இவ்வருடம் பிழைப்பதாக கூறியுள்ளார்.
பருவத்தின் ஆரம்பகாலத்தில், ஹமில்டனை விட 43 புள்ளிகள் றொஸ்பேர்க் அதிகமாகப் பெற்ற நிலையில், அதன்பின்னர் ஆறு பந்தயங்களை வென்ற ஹமில்டன், 19 புள்ளிகள் முன்னிலையைப் பெற்றிருந்தார். பின்னர் பருவகால விடுப்புக்குப் பின்னர், மூன்று பந்தயங்களில் றொஸ்பேர்க் வென்று, முன்னிலைக்கு வந்துள்ளார்.
இன்னும் ஐந்து பந்தயங்களே மீதமிருக்கையில், அடுத்த மூன்று பந்தயங்களில், ஹமில்டனுக்குப் பின்னால் இரண்டாமிடத்தை றொஸ்பேர்க் பெற்றாலே, புள்ளிகள் முன்னணியை வைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும், மறக்க வேண்டாம், தான் உலக சம்பியன் எனவும், ஆகவே, தனக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று ஹமில்டன் கூறியுள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago