Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், அன்றிச் நொர்ட்ஜே (2), அக்ஸர் பட்டேல் (2), ககிஸோ றபாடாவிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 9
விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், அப்துல் சமட் 28 (21), ரஷீட் கான் 22 (19) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 135 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 47 (41), ஷீகர் தவானின் 42 (37), அணித்தலைவர் றிஷப் பண்டின் ஆட்டமிழக்காத 35 (21) ஓட்டங்களுடன் 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக அன்றிச் நொர்ட்ஜே தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
25 minute ago
42 minute ago