Shanmugan Murugavel / 2016 நவம்பர் 10 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டகாலத்துக்குப் பின்னர், உபாதை முழுமையாகக் குணமடையாத நிலையிலும், தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் பங்குபற்றிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், 2ஆவது போட்டியிலும் பங்குபற்றுவார் என அறிவிக்கப்படுகிறது.
முதலாவது போட்டியில், போதிய தயார்படுத்தலின்றி அதிக ஓவர்களை வீசிய காரணத்தால், காயமொன்று ஏற்படுவதற்கு ஸ்டார்க்குக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் அறிவித்த போதிலும், அதையும் மீறி, அவர் இப்போட்டியில் விளையாடவுள்ளார்.
முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில், நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள 2ஆவது போட்டியில் வெற்றியடைவதை, அவுஸ்திரேலிய அணி முக்கியமாகக் கருதுவதையே இது எடுத்துக் காட்டுகிறது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago