Shanmugan Murugavel / 2016 நவம்பர் 15 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், இனிங்ஸ் தோல்வியைத் தழுவிய அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், ஊடகவியலாளர் மாநாட்டில் அமர்வதற்கே, அவமானகரமாக உணர்வதாகத் தெரிவித்தார். உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியாக இருந்த அவ்வணி, எவ்வளவு தூரம் கீழிறங்கியுள்ளது என்பதை, அவரது வார்த்தைகள் வெளிப்படுத்தின.
இது, டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி பெறும், 5ஆவது தொடர்ச்சியான வெற்றியாகும். இதற்கு முன்னர், இலங்கையில் வைத்து 3 போட்டிகளில் தோல்வியடைந்து, தமது முதலிடத்தை அவ்வணி பறிகொடுத்திருந்தது.
இவ்வாறான மோசமான திறமை வெளிப்பாட்டைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் மாநாட்டில் அமர்ந்த ஸ்மித், "உண்மையைச் சொல்வதானால், இங்கே அமர்வதற்கு அவமானகரமாக உணர்கிறேன். அதிகமான தடவைகள், விக்கெட்டுகளை ஒரு தொகையாக விக்கெட்டுகளை இழந்தோம். இன்று 30 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள். முதல் இனிங்ஸில் 85 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகள். அவ்வாறு நடக்கும் போது, போட்டிகளை உங்களால் வெல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை, இது அடிக்கடி இடம்பெறுகிறது" என்றார். அவுஸ்திரேலிய அணி, சிறப்பாகப் போராடவில்லை எனத் தெரிவித்த ஸ்மித், கடினமான தருணங்களில் போரிட்டு, இணைப்பாட்டங்களை உருவாக்கத் தவறிவிட்டதாக ஸ்மித் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டுவரை அணியின் பயிற்றுநராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள டெரன் லீமனின் எதிர்காலம் தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, "நாங்கள் சிறப்பாக விளையாடாமைக்கு, அவர் பொறுப்புக் கிடையாது. எங்களுடைய பணிகளை நாங்கள் தான் செய்ய வேண்டும். பயிற்சிகளிலும் தயார்படுத்தல்களிலும், அவரால் செய்யக்கூடிய அனைத்தையும் அவர் செய்கிறார்" என்று குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள், சிறப்பாகத் தயார்படுத்தினாலும், ஆடுகளத்தில் சிறப்பாகச் செயற்படவில்லை என்று குறிப்பிட்ட ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை, தாங்கள் சிறப்பாகக் கையாளவில்லை என்றும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அணியின் மோசமான துடுப்பாட்டப் பெறுகளைத் தொடர்ந்து, முதற்தரத் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில், அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களில் அனேகமானோர் பங்குபற்றவுள்ளதாகவும், ஸ்மித் உறுதிப்படுத்தினார். தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் முகமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago