Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் தலைமைப் பதவியை இழப்பது குறித்து, வெய்ண் றூணி, கவலைப்படத் தேவையில்லை என, அவ்வணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ தெரிவித்துள்ளார்.
லெய்செஸ்டர் சிற்றி அணிக்கெதிராகக் கடந்த வாரம் இடம்பெற்ற போட்டியில், ஆரம்பிக்கும் பதினொருவரில், றூணி சேர்க்கப்பட்டிருக்கவில்லை. எனவே, றூணியின் மீது நம்பிக்கையை, மொரின்ஹோ இழந்துவிட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டதோடு, றூணியின் அணித்தலைமை தொடர்பாகவும் கேள்விகள் எழுந்தன.
எனினும் கருத்துத் தெரிவித்த மொரின்ஹோ, "என்னவென்றாலும், றூணி தான் தலைவர். ஆடுகளத்தில் அவர் இருக்கிறாரா அல்லது வெளியில் இருக்கிறாரா என்பது ஒரு விடயமல்ல. எனது அணித்தலைவர் அவர். கழகத்தின் தலைவர் அவர். வீரர்களின் தலைவர் அவர். அனைவரது தலைவராகவும் இருப்பது கடினமானது. ஆகவே, அனைத்து மதிப்பும் ஆதரவும் அவருக்கு உண்டு" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மொரின்ஹோ, "அவர், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஆள். அவர், திறந்த தொழில்வாண்மையாளர். அவர் வெற்றிபெற விரும்புகிறார். நாங்கள் கோலைப் பெற்ற போது, அவர் மகிழ்ச்சியடைந்தார். வீரர்களோ அவர் கதைத்து, அவர்களை ஊக்குவிக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர், விளையாடும் பதினொருவரில் இடம்பெற்றிருந்த போது அவர் எதைச் செய்தாரோ, அதையே செய்து வருகிறார். அவர் எங்களது ஆள். எங்களுக்காக அவர் கோல்களைப் பெறுவார். எங்களுக்காகக் கடிமாக உழைப்பார். அதில் எனக்குச் சந்தேகம் கிடையாது" என்று மேலும் குறிப்பிட்டார்.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago