Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 13 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக, பாகிஸ்தானிலிருந்து வரும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அப்ரிடி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று, பின்னர் மீள்வருகைகளைப் புரிவது வழக்கமாகும். தற்போது அவர், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்த போதிலும், அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கெதிரான தொடரில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், இம்மாத இறுதியில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஷகிட் அப்ரிடி சேர்க்கப்படவுள்ளதாகவும் அந்தத் தொடரின் முடிவில், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழாமில், அப்ரிடி சேர்க்கப்படாத போதிலும், இந்தத் தொடருக்காக அவர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
MOHAMMED ILIYAS Wednesday, 14 September 2016 12:22 AM
I am very fell to missed my great instear of my life in afraid
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago