Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 24 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியன்களான நியூசிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது. தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட தென்னாபிரிக்க அணியை, விறுவிறுப்பான போட்டியொன்றில் தோற்கடித்தே, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
போட்டியின் முதலாவது புள்ளிகளை தென்னாபிரிக்க அணி பெற்றதோடு, முதலாவது பாதி முடிவடையும் போது 12-7 என்ற புள்ளிகள் கணக்கில் அவ்வணி முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் மேலதிகமான போராட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 10 புள்ளிகளைப் பெற்று, மேலதிகமாக எந்தவொரு புள்ளியையும் விட்டுக்கொடுக்காது, 17-12 என்ற முன்னிலையைப் பெற்றது. ஆனால், தென்னாபிரிக்க அணி தொடர்ந்து போராடியதோடு, 69ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டியின் உதவியோடு 18-20 என புள்ளிகளின் நிலைமையை மாற்றியது. எனினும், அதன் பின்னர் புள்ளிகள் பெறப்படாமல் போக, 20-18 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இறுதிப் போட்டிக்கு அவ்வணி தகுதிபெறும் 4ஆவது தடவை இதுவென்பதோடு, 3ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு, நியூசிலாந்துக்கு வெளியே முதலாவது தடவையாக இக்கிண்ணத்தைக் கைப்பற்ற எதிர்பார்த்துள்ளது.
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026