Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், தென்னாபிரிக்காவின் சகலதுறைவீரர் கிறிஸ் மொறிஸ், ராஜஸ்தான் றோயல்ஸுக்கு 16.25 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலம் போயுள்ளார்.
இதேவேளை, நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளராக கைல் ஜேமிஸன், 15 கோடி இந்திய ரூபாய்களுக்கு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ஏலம் போயுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரர் கிளென் மக்ஸ்வெல்லும் 14.25 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலம் போயுள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜஹை றிச்சர்ட்ஸன், பஞ்சாப் கிங்ஸுக்கு 14 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலம் போயுள்ளார்.
இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸுக்கு 9.25 கோடி இந்திய ரூபாய்களுக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர் கிருஷ்ணப்பா கெளதம் ஏலம் போயுள்ளதுடன், இங்கிலாந்து சகலதுறைவீரர் மொயின் அலி 7 கோடி இந்திய ரூபாய்களுக்கு சென்னைக்கு ஏலம் போயுள்ளார். தவிர, செட்டேஸ்வர் புஜாராவையும் 50 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு ச்சென்னை ஏலமெடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago