2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

20ஆவது பொதுநலவாய விளையாட்டு நிகழ்வு

Super User   / 2014 ஜூலை 20 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆவது பொதுநலவாய விளையாட்டுக்கள் ஸ்கொட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் நடைபெற உள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு இரண்டாவது ராணி எலிசபெத் தலைமையில் செல்டிக் பார்க்கில் இம் மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இம் மாதம் 24ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி வரை 11 நாட்கள் நடைபெறும் இப் போட்டியில் இலங்கை உட்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 விளையாட்டு வீரர்கள் 18 விளையாட்டுக்களில் பங்குபற்றவுள்ளனர்.

இப் போட்டியில் 261 பதக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

விஷேட தேவையுடையோருக்கான பல விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளதுடன் 22 தங்கப்பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பில் கூடிய பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, வெற்றி பெற்ற நகராக ஸ்கொட்லாந்தின் பெயரை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .