A.P.Mathan / 2014 மே 14 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணியானது டெல்லி டெயார் டெவில்ஸ் அணியை 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது. இதில் யுவராஜ் சிங் 29 பந்துகளில் 1 நான்கு ஓட்டம், 9 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றார். AB DE வில்லியர்ஸ் 33 ஓட்டங்களையும், பார்த்திவ் பட்டேல் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுமினி 30 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 48 ஓட்டங்களையும், கெவின் பீற்றர்சன் 29 ஓட்டங்களையும். கெடார் ஜாதவ் ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முத்தையா முரளிதரன், மிச்சேல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக யுவராஜ் சிங் தெரிவானார். 44 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
59 minute ago