2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

அஜ்மலுக்கு மீண்டும் சோதனை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல், மீண்டும் உயிரியல் இயந்திர தொழில் நுட்ப பரிசோதனைக்கு செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அஜ்மலின் பந்துவீச்சு பாணியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பந்துவீச்சு கோணம் 15 பாகைக்குள் குறைந்து உள்ளதாக நம்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுப்ஹான் அஹமட் தெரிவித்துள்ளார். 
 
அஜ்மலின், பந்துவீச்சு மாற்றத்திற்கான பயிற்சிகளை வழங்கி வரும் சக்லைன் முஸ்டாக், அஜ்மலின் பந்துவீச்சு மாற்றத்தில் திருப்தியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் என சுப்ஹான் அஹமட் தெரிவித்துள்ளார். தன்னுடைய பந்துவீச்சு மாற்றத்தில் சைட் அஜமலும் திருப்தியாக இருக்கும் அதேவேளை தான் மீண்டும் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளதாகவும் மேலும் சுப்ஹான் அஹமட் தெரிவித்துள்ளார். 
 
மிக விரைவில் இங்கிலாந்தில் கார்டிபில் உள்ள பல்கலைக் கழகத்தில் உயிரியல் இயந்திர தொழில் நுட்ப பரிசோதனைக்கு சைட் அஜ்மல் செல்லவுள்ளார். அதற்க்கு முன்னர் சில உள்ளூர் போட்டிகளில் சைட் அஜ்மல் விளையாடுவார் என நம்பப்படுகின்றது. 
 
சைட் அஜ்மலின் பந்துவீச்சு விதிமுறைகளை இரட்டிப்பிலும் அதிகமாக தாண்டியுள்ளது என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை சில மாதங்களுக்கு முன்னர் சைட் அஜ்மல் பந்துவீசுவதை தடை செய்தது. 15 பாகை என்பதே ஒரு சுழல்ப் பந்து வீச்சாளர் கையை மடிக்கக்கூடிய அதி கூடிய எல்லையாகும். சைட் அஜ்மலின் குறைந்த வளைவு 37 பாகையாகவும், கூடிய வளைவு 42 பாகையாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு பந்துவீச்சு பாணியும் ஒவ்வொரு ஓவர்களாக வீசப்பட்டு 8 விதமான பந்துவீச்சு பாணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன்படி அஜ்மலின் பந்து வீச்சு முழுமையாக விதிமுறைகளை தாண்டி உள்ளதாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அவரை பந்து வீசுவதில் இருந்து தடை செய்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .