George / 2015 மார்ச் 19 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
மேல்போர்னில் இன்று வியாழக்கிழமை(19) ஆரம்பமான போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை குவித்தது.
126 பந்துகளுக்கு முகங்கொடுத்து இந்திய வீரர் ரோஹித் சர்மா 3 ஆறு ஓட்டங்கள் 14 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 137 ஓட்டங்களை விளாசினார்.
ஏனையவர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, 57 பந்துகளை எதிர்கொண்ட ரைனா 64 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
303 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி பங்களாதேஷ் அணி, ஆரம்பம் முதலே ஓட்டங்களை பெறுவதற்கு சிரமப்பட்டது.
அணி வீரர்கள் எவரும் அரைச்சதத்தைகூட தாண்டாத நிலையில் ஆட்டமிழக்க, நஷீர் ஹூசைன் மாத்திரம் 30 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
அடுத்தடுத்த விக்கெட் சரிவால் தடுமாறிய பங்களாதேஷ் அணி, 45 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 109 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இன்றைய வெற்றியானது அணித்தலைவர் தோனி தலைமையில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பெறும் 100ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026