A.P.Mathan / 2015 ஜூன் 03 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிரவிட், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய நட்சத்திர வீரர்களில் ஒருவரான ட்ராவிட், குறித்த பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
ஆலோசனைக்குழுவில் இவர் இணையவுள்ளார் என்ற செய்தி வெளியாகிய போதும் இளம் வீரர்களுடன் கடமையாற்றும் எண்ணமும் அதிக பொறுப்புகள் தனக்கு தேவை என்ற விருப்பம் காரணமாகவுமே இந்த பொறுப்பை ட்ராவிட் தெரிவு செய்துள்ளார். இவருக்கு இந்திய தேசிய அணிக்கான பயிற்றுவிப்பாளர் பதவியை வழங்கும் திட்டங்கள் இருந்த போதும் தன்னுடைய இளம் குடும்பத்தை கருத்திற் கொண்டும், சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 3 வருடங்கள் மாத்திரமே பூர்த்தியாகியுள்ள நிலையில் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற விருபத்திலும் இந்த பதவியை அவர் விரும்பவில்லை.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026