A.P.Mathan / 2015 ஜூன் 03 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் அணியில் இருந்து முக்கிய வீரர்களான ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன், மூயேன் அலி, இயன் பெல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மூயேன் அலி - ஆஷஸ் தொடரின் அணியில் முக்கிய இடம் பிடிப்பார் என்ற நிலையில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்றைய மூன்று வீரர்களும் போதியளவு பெறுதிகளை வழங்காத நிலையில் அணியால் நீக்கப்பட்டுள்ளனர். அவர் முதற் தர போட்டிகளில் விளையாடி இழந்த போர்மை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலக்கிண்ண அணியில் இடம் பெற்ற ரவி போபரா, கரி பலன்ஸ், ஜேம்ஸ் ரெட்வேல் ஆகியோரும் அணியால் நீக்கப்பட்டுள்ளனர். ஆதில் ரசீட், சாம் பில்லிங்ஸ், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, மார்க் வூட் ஆகியோர் அணியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம்
ஒய்ன் மோகன் (தலைவர்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீபன் பின், அலெக்ஸ் கேல்ஸ், க்றிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கட், ஆதில் ரசீட், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ரெய்லர், டேவிட் வில்லி, மார்க் வூட்.
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026