Shanmugan Murugavel / 2015 ஜூலை 21 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கிறிஸ் ரோஜெர்ஸ் அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஜேம்ஸ் அன்டர்சனின் பந்துவீச்சில் தலைக்கவசத்தின் வலது காதுப்பகுதியில் தாக்கப்பட்டு இரண்டுநாட்களின் பின் டேவிட் வோனர் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது மறுமுனையில் நின்று கொண்டிருந்த ரோஜெர்ஸ் தலைச்சுற்று காரணமாக களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த ஸ்கான்களில் இருந்து அவருக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னரும் மேற்கிந்தியஅணிகளுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும், தலைக்கவசத்தில் பந்து பட்டதன் காரணமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026