Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் லண்டன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இறுதியும், ஐந்தாவதுமான டெஸ்ட்டின் மூன்றாம்நாள் ஆட்டமுடிவில் பொலோ ஒன்னில் தமது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி பயணிக்கிறது.
தற்போது களத்தில் ஜொஸ் பட்லர் 33 ஓட்டங்களுடனும், மார்க் வூட் ஓட்டமெதனையும் பெறாமல் உள்ளனர். முன்னதாக துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அலஸ்டெயர் குக் 85 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் ஜொனி பெயர்ஸ்டோ 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நதன் லயன் இரண்டு விக்கெட்டுக்களையும் பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஜோன்சன், ஸ்டீவன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதிகபட்சமாக அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் மொயின் அலி 30 ஓட்டங்களையும், மார்க் வூட் 24 ஓட்டங்களையும், அலஸ்ட்டீர் குக் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மிட்செல் மார்ஷ், மிட்செல் ஜோன்சன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், பீட்டர் சிடில், நதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தமது முதலாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 481 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago