Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சமாதானத்தைச் சீர்குலைத்து, வன்முறைகளைத் திணித்து அழிவுகளில் ஆட்சி செய்யவேண்டும் என்று அஹிம்சையான மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில், நேற்று (10) நடைபெற்ற 150 பயனாளிக் குடும்பங்களுக்கு, அடிப்படைச் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் மூவினத்தவர்களும் இன வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் விரும்பவில்லை என்றுத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்காலச் சந்ததிக்கு சமாதான தேசத்தைக் கையளிப்பதற்காக, அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நாட்டில், மூவினத்தவர்களும் நீண்ட காலமாக ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் வாழ்ந்து வந்த வரலாறுகள் உள்ளன என்றும் அதேபோன்று, இன, மத, பேதங்களைக் கடந்து இலங்கையர் என்ற அடிப்படையில், எதிர்கால சந்ததிக்கு சமாதான தேசத்தைக் கையளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
6 hours ago
6 hours ago