2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உலக செவிப்புலனற்றோர் தின நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு தினம் மற்றும் உலக செவிப்புலனற்றோர் தின நிகழ்வு சனிக்கிழமை(26) காலை 9.00மணிக்கு திருமலை வீதியில் உள்ள செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் போசகர் கே.பிரதீபன்(சனா) தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ,விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அன்றைய தினம் நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் போசகர் பிரதீபன் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 18வயதுக்கும் மேற்பட்ட செவிப்புலனற்றோர் அனைவரையும் பங்குபற்றுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும்,ஞாயிற்றுக்கிழமை(27) மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜாவும் பரிசளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X