Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான “தராக்கி” என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுதினம், மட்டக்களப்பு ஊடக மையத்தில், உணர்வுபூர்வமாக இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவுதின நிகழ்வில், சிவராமின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, 16 ஈகைச் சுடர் ஏற்றப்பட்
அத்துடன், மலர்தூவி, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன், மூத்த ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன், அ.கங்காதரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
கொவிட் 19 சுகாதார நடமுறைகளைப் பின்பற்றி இந்த நினைவுதின நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிட்த்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
42 minute ago
43 minute ago