2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

’எதிர்கால ஜனாதிபதி’ மட்டக்களப்பில் கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் 'எதிர்கால ஜனாதிபதி' என்ற தொனிப்பொருளில் அமைந்த கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த , 'மார்ச் 12' எனும் இயக்கத்தின்  செயற்பாட்டுக் குழு மாவட்ட இணைப்பாளர் எஸ். சிவயோகநாதன்  எதிர்வரும் வியாழக்கிழமை 01.08.2019  ஆம் திகதி  மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு மாவட்டத்திலுள்ள கல்வியாளர்கள், அரச பணியாளர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், வர்த்தகர் சங்கத்தினர், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றுதெரிவித்த மாவட்ட இணைப்பாளர்,இதுபோன்ற கலந்துரையாடல்கள் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X