Suganthini Ratnam / 2017 மே 01 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கல்குடா, கும்புறுமூலைக் கிராமத்தில் எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை அமைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து மட்டக்களப்பு நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி அமைதிப் பேரணியை நடத்துவதற்கு சமாதானத்துக்கான இலங்கை சமயங்களின் பேரவையினுடைய மட்டக்களப்பு மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில், மறைமாவட்டக் கல்வி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை மேற்படி பேரவையின் கூட்டம் நடைபெற்றபோதே, இந்தத் தீர்;மானம் எடுக்கப்பட்டதாக மேற்படி பேரவையின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்படப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பில் ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், பேரணியைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அதிகாரிகளிடம மகஜர் கையளிக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.
கும்புறுமூலைக் கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாகவும் அதனால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புத் தொடர்பாகவும் இ;ந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago