2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் நகர சபைக்கு விருது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதி சிறந்த கணக்கீட்டு முகாமைத்துவத்தை மேற்கொண்டமைக்கான விருது, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்குக்  கிடைத்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான கணக்குச் சோதனையின் போது, அதிசிறந்த கணக்கீட்டு முகாமைத்துவத்தை மேற்கொண்டமைக்காக, அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழு (கோப் ), இந்த விருதை, ஏறாவூர்  நகர சபைக்கு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற விசேட விருது வழங்கும் விழாவின் போது, நகர சபை சார்பாக செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X