Suganthini Ratnam / 2017 மே 04 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் நகர காட்டுப்பள்ளி வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றில் பணமும் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், அவ்வீட்டிலிருந்த பெண்கள் இருவர் கொள்ளையர்களின் கத்தி வெட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப்; பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (4) அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கூரை ஓடுகளைக் கழற்றிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
பணப் பையிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு தங்கச் சங்கிலிகளையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
தாயையும் அவரது மகளையும் கத்தியால் வெட்டிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அறுத்தெடுத்துச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
கத்தி வெட்டுக் காயங்களுக்குள்ளான தாயும் மகளும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடொன்றுக்கு மேற்படி வீட்டு உரிமையாளர் தொழில் வாய்ப்புச் பெற்றுச் சென்றுள்ள நிலையில், அவ்வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
நீளக் காற்சட்டை அணிந்துவந்த இருவரே இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன், வீட்டின் பின்புறமாகவுள் பாலத்தினூடாக வந்து மதில் மேல் ஏறி வீட்டினுள் நுழைந்துள்ளமைக்கான அடையாளங்கள் தென்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025