Niroshini / 2016 ஜனவரி 24 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஐஸ்கிறீம் வியாபாரியொருவர் வழமை போன்று மோட்டார் சைக்கிளில் சென்று ஐஸ்கிறீம்கள் விற்றுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பின் காரணமாக திடீரென மயங்கி வீழ்ந்து மரணித்த சம்பவமொன்று மட்டக்களப்பு, மாமாங்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், விதானையார் வீதியைச் சேர்ந்த காசிமாலெப்பை முஹம்மது றிபாய் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை(23) காலை மோட்டார் சைக்கிளில் ஐஸ்கிறீம் வியாபாரத்துக்காக மட்டக்களப்பு, மாமாங்கம் பகுதிக்குச் சென்று ஐஸ்கிறீம் விற்றுக் கொண்டிருக்கும்போது மயக்கமுற்று விழுந்தவர், சிறிது நேரத்தில் மரணமடைந்துவிட்டதாக அவ்விடத்திலுள்ளோர் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர்,உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago