Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள கைம்பெண்கள்; எதிர்நோக்கும் வாழ்வாதாரம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம் கூறியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரை திருகோணமலையிலுள்ள காரியாலயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஞாயிற்றுக்கிழமை (07) சந்தித்துக்கு கலந்துரையாடினார்.
வடக்கு, கிழக்கில் காணமல் போனோர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஸ்தாபனம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. புதிய அரசு வேண்டிய கவனம் செலுத்துவதற்கு ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் நாம் வழங்குவோம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
தற்போதைய புதிய அரசாங்கத்தில் நாம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் மூலம் காணமல் போனோர் விடயத்தில் இலங்கை அரசு ஒரு தீர்மான முடிவை எடுக்கும் என நம்புகிறோம். அதற்கு வேண்டிய வலியுறுத்தல்களை உரியவர்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.
இன்னமும் சிறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் அக்கறை கொண்டவர்களாக காணப்படுகின்றோம் குறிப்பாக நிதி விவகாரத்தில் பாரிய முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதில் புதிய திருப்புமுனை ஏற்பட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.
மேலும் கிழக்கு மாகாணத்தின் முதலீடு, வேலைவாய்ப்பு, சம்பூர் மீள் குடியேற்றம் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் குடியேற்றம் போன்ற விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இனங்கள் இணைந்து ஆட்சி செய்யும் கிழக்கு மாகாணம் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்பதை ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago