Editorial / 2022 ஜனவரி 25 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் ஓட்டோ சாரதியொருவர், இன்று (25) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், ஓட்டோவும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், கறுவப்பங்கேணி, நாவலர் வீதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய மாசிலாமணி தர்மரெட்னம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கறுவப்பங்கேணியிலிருந்து மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு பயணிகளை ஏற்றுவதற்கு சென்ற நிலையிலேயே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Feb 2026