Princiya Dixci / 2021 ஜூன் 07 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், கொரோனா தொற்றுக் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணொவர் உயிரிழந்துள்ள நிலையில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், 68 கர்ப்பிணிகளுக்கு, இன்று (07) பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.
27 minute ago
32 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
57 minute ago