2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

களுதாவளையில் ஆணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2021 மே 18 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனார்.

இன்று (18) காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், சடலம் கிடப்பதை அவதானித்து, அப்பகுதி கிராம சேவைகருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கிராம சேவைகர் ஸ்தலத்துக்கு உடன் விரைந்ததுடன், களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன தலைமையிலாள பொலிஸ் குழுவினர், சடலத்தைப் பார்வையிட்டனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று மேற்படி சடலத்தை, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .