Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பிரிவில் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை, களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
குறிப்பாக விவசாயிகள், செங்கல் தொழில் செய்வோர், கால்நடை வளர்ப்போர் இந்த எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்படுகின்றனர். இந்நோய் பரவாமலிருப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எலிக்காய்ச்சல் பரவும் முறை, எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள், சிகிச்சை பெறும் முறை, எலிகளை கட்டுப்படுத்துதல் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago