Editorial / 2021 மே 15 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு முகத்துவாரம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான வியாபாத்தில் ஈடுபட்ட ஒருவரை கால் போத்தல் கொண்ட 150 மதுபானப் போத்தல்களுடன் நேற்று (14) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு தலைமையக மதுபோதை ஒழிப்பு பிரிவினர், பாலைமீன்மடு பிரதேசத்திலுள்ள வீடொன்றை முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 6 காட்போட் பெட்டிகளில் இருந்து கால் (1/4) போத்தல்கள் கொண்ட 150 மதுபான போத்தல்களை மீட்டனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago